×
Saravana Stores

பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை பசுமை வீரர்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்

பந்தலூர், மே 14: பந்தலூர் பஜாரில் நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை எனவும் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்பதால் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் பஜார் ஆர்ஐ ஆபீஸ் அருகே நெடுஞ்சாலையின் குறுக்கே இருந்து வந்த கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் மழைநீல் செல்வதற்கு முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மழைக்காலங்களில் மழைநீர் கடைகளுக்குள் புகுந்து பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று முன்தினம் பந்தலூரில் பெய்த மழைக்கு மழைநீர் செய்வதற்கு முடியாமல் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்பை முறையாக அகற்றி மழைநீர் வழிந்தோடும் வசதிகளை முறையாக செய்யாததால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

எனவே நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்காமல் காழ்வாயில் வழிந்தோடும் விதமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை பசுமை வீரர்கள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Green Warriors ,Bandalur bazaar ,Bandalur ,Bandalur Bazar ,Nilgiri District ,Pandalur Bazar ,RI ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே தொடரும் பரபரப்பு...