×
Saravana Stores

காவல் அதிகாரிகளுக்கு புதிய இந்திய சட்டங்கள் பயிற்சி வகுப்பு: எஸ்பி துவக்கி வைத்தார்

விருதுநகர், மே 14: விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் காவல் அதிகாரிகளுக்கு புதிய இந்திய தண்டனைச் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பை எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா துவக்கி வைத்தார். பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சூர்யமூர்த்தி, அசோகன், உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.மதுரை சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் சோனா, தமிழ்செல்வி மற்றும் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர்.

அதில் இந்தியாவில் தற்போது நடைமுறையிலுள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய சாட்சியம் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரஉள்ள பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சசஷா ஆதினியம் ஆகிய புதிய சட்டங்கள் குறித்து பேசினர்.பயிற்சி வகுப்பு மே 13 துவங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து காவல் அதிகாரிகள், ஆளினர்களுக்கு உட்கோட்ட வாரியாக துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

The post காவல் அதிகாரிகளுக்கு புதிய இந்திய சட்டங்கள் பயிற்சி வகுப்பு: எஸ்பி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : SP ,Virudhunagar ,Perozhan Abdullah ,Suryamurthy ,Asokan ,Utkota Sub-Police ,Dinakaran ,
× RELATED காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு