×

இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை ஐஐடியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை ஐஐடியில் இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
இந்த 4 ஆண்டுகால படிப்பில் அடிப்படை நிலைச் சான்றிதழ், டிப்ளமோ, பிஎஸ் பட்டம் ஆகியவற்றை மாணவர்கள் பெற முடியும். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பானது, தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்குகிறது. இந்தியாவில் மின்னணு மற்றும் உட்பொதிக்கப்பட்ட தயாரிப்புகள் துறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை அதிக அளவில் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மின்னணு தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை உருவாக்க இந்தியா செமிக்கண்டக்டர் மிஷன் திட்டத்துடன் இணைந்துள்ளது. இந்த படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் மே 26ம் தேதி வரை https://study.iitm.ac.in/es/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை ஐஐடியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,IID ,BACHELOR SCIENCE ELECTRONIC SYSTEMS COURSE ,Chennai IIT ,Chennai IID ,
× RELATED சென்னை பட்டினப்பாக்கத்தில் கடையில்...