×

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்திகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. கே.அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Tamilnadu Governor's House ,CHENNAI ,Tamil Nadu Governor's House ,Guindy, Chennai ,Tamil Nadu BJP ,President ,
× RELATED கட்சியை டேமேஜ் ஆக்கியது ஆருத்ரா...