×
Saravana Stores

போக்குவரத்து துறையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்து துறையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கனகராஜ் அரசு விரைவு கழகப் போக்குவரத்து மேலாண் இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: விரைவு போக்குவரத்து கழகத்தில் 684 தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பணிமனைகளிலும் காலிப்பணியிடங்கள் இருந்தும் தினக்கூலி தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களில் பணிபுரிய விடாமல் வெவ்வேறு ஊர்களில் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்ததன்படி, கலந்தாய்வு நடத்தி அனைவருக்கும் அவரவர் சொந்த ஊர்களில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல், தினக்கூலி தொழிலாளர்களை பொருத்தவரை ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நாள் ஊதியமாக ₹953 வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு ₹436 மட்டுமே வழங்கப்படுகின்றன. தொழிலாளர் நலத்துறை ஆணைய உத்தரவு படி, பொது போக்குவரத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக சட்டப்படி அரசு ₹882 நிர்ணயித்துள்ளது. எனவே, ஆணையத்தின் உத்தரவின்படி, தினக்கூலி தொழிலாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து துறையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்: சிஐடியு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CITU ,CHENNAI ,Government Rapid Transit Corporation Employees' Union ,General Secretary ,Association Kanagaraj Govt Express Corporation Transport ,Dinakaran ,
× RELATED சாம்சங் பிரச்னையை முடிவுக்கு...