×

விமானத்தில் பயணி போதையில் ரகளை: போலீசில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில், அகமதாபாத் செல்லும் விமானத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட குஜராத் பயணியை பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன் காந்தி (35). இவர் சென்னையில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடக்கும் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, பிரவீன் காந்தி தனது 5 வயது மகளுடன் அகமதாபாத்திற்கு விமானத்தில் செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு மதுபோதையில் வந்தார். பிரவீன் காந்தி, 5 வயது குழந்தையுடன் வந்ததால், அவரை சரியாக சோதனை நடத்தாமல் அனுமதித்து விட்டனர். பிரவீன் காந்தி போர்டிங் பாஸ் உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே போதையில் இருந்த பிரவீன் காந்தி, சக பயணிகளிடம் பிரச்னை செய்தாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகள், விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். இதையடுத்து விமான பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ேபாலீசில் ஒப்படைக் கப்பட்டார்.

The post விமானத்தில் பயணி போதையில் ரகளை: போலீசில் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ahmedabad ,Chennai airport ,Praveen Gandhi ,Gujarat ,
× RELATED முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்