- அஇஅதிமுக
- பொது
- புது தில்லி
- எடப்பாடி பழனிசாமி
- பொதுச்செயலர்
- பிரதான தேர்தல் ஆணையம்
- பி. ஜெயசிம்மன்
- சென்னை உயர் நீதிமன்றம்
- மக்களவை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் பி.ஜெயசிம்மன் என்பவருக்கு தகவல் உரிமை பெரும் சட்டம் மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், ”தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதனை கருத்தில் கொண்டு தான் ஆணையத்தின் தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே தேர்தல் ஆணைய செயலாளர் ஜெய் தேவ் லஹரி, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விதித்துள்ள ஆணையே தொடரும் என்று தெரிவித்துள்ளது.
The post அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.