×
Saravana Stores

வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டி: 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பு

புதுடெல்லி: வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், 5, 6, 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. வரும் 20ம் ேததி 5ம் கட்ட தேர்தல் நடைபெறுவதால், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் வேட்பாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில், ஐந்தாம் கட்ட தேர்தலில் 82 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

அதாவது 12 சதவீத பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். மொத்த வேட்பாளர்களில் 23% வேட்பாளர்கள் (159 பேர்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 18% பேர் (122 பேர்) பெண்களுக்கு எதிரான கடுமையான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதல் கட்ட தேர்தலில் 135 (8%) பெண் வேட்பாளர்களும், இரண்டாம் கட்டத்தில் 100 (8%) பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

அதேபோல் மூன்றாம் கட்ட தேர்தலில் 123 (9%) பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், நான்காம் கட்டத்தில் 170 (10%) வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கட்சி வாரியாக வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை பார்க்கும் போது, ஒவைசி கட்சியின் நான்கு வேட்பாளர்களில் இருவர் (50%), சமாஜ்வாதி கட்சியின் 10 வேட்பாளர்களில் நான்கு பேர் (40%), காங்கிரசின் 18 வேட்பாளர்களில் ஏழு பேர் (39%), சிவசேனாவின் (ஏக்நாத்) ஆறு பேரில் இருவர் (33%), பாஜகவின் 40 வேட்பாளர்களில் 12 பேர் (30%), திரிணாமுலின் ஏழு வேட்பாளர்களில் இருவர் (29%), ஆர்ஜேடியின் நான்கு வேட்பாளர்களில் ஒருவர் (25%), சிவசேனாவின் (உத்தவ்) எட்டு பேரில் ஒருவர் (13%) மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

மொத்த வேட்பாளர்களில் 33% பேர் கோடீஸ்வரர்களாக (1 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள்) உள்ளனர். வேட்பாளர்களில் 42% பேர் 5 முதல் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர். மேலும் 50% பேர் மட்டுமே பட்டதாரிகள் அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பை படித்துள்ளனர். 20 பேர் வெறும் கல்வியறிவு மட்டுமே பெற்றவர்கள் என்றும், ஐந்து பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

The post வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டி: 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...