குஜராத்: குஜராத் மாநிலம் வதோதராவில் பானி பூரி விற்பவரின் மகள் பூனம் குஷ்வாஹா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண்கள் பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளார். 25 ஆண்டுகளாக பானி பூரி விற்று வரும் தந்தைக்கு அவ்வப்போது உதவி வந்த பூனம், மருத்துவராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என கூறுகிறார். பூனத்தின் தந்தை பிரகாஷ் குஷ்வாஹா, கடந்த 25 ஆண்டுகளாக வதோதராவில் பானிபூரி விற்று வருகிறார்.
பூனம் தன் தந்தைக்கு வியாபாரத்திலும், தாய் வீட்டு வேலைகளிலும் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார். அதேசமயம் தன் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். மருத்துவராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் பூனம் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். பூனத்தின் வெற்றி அவரது குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உத்வேகமாகவும், சவால்களை சமாளித்து கல்வியில் புதிய உயரங்களை எட்டுவதில் விடாமுயற்சி மற்றும் உத்வேகத்தை அளித்துள்ளது.
The post குஜராத் மாநிலம் வதோதராவில் பானி பூரி விற்பவர் மகளின் அசத்தல் சாதனை! appeared first on Dinakaran.