×

இன்னுயிர் காப்போம் திட்டம் 18ம் தேதி முதல்வர் துவக்கம்

சென்னை: இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் 18ம் தேதி தொடங்கி வைக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வருகிற 18ம் தேதி, இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.  இதையொட்டி, மருத்துவமனைக்கு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகை யில், தமிழகத்தில் எந்த சாலையில் விபத்து ஏற்பட்டாலும் அவர்கள் உயிர்காக்கும் திட்டமாக இத்திட்டம் அமையும். இதற்காக, தமிழகத்தில் 610 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பவர்களுக்கு ஊக்க தொகை 5 ஆயிரம் அளிக்கப்படும் என்றார். பின்னர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று பங்காரு அடிகளாரை சந்தித்து பேசினார். ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ், காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post இன்னுயிர் காப்போம் திட்டம் 18ம் தேதி முதல்வர் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Innuiv Kappom ,Chennai ,Chengalpattu District ,Melmaruvathur Adiparashakti Multi Specialty ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை