×

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை :தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரட்டார்.

விழுப்புரம் மேல்மலையனூர், பழைய மரக்காணம் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா மே 18-ம் தேதி நடைபெறுகிறது. மே 18-ம் தேதி நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் நடைமுறை சட்டத்தை சுட்டிக்காட்டி கோவில் நிர்வாகிகள் அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி வளத்தி காவல்நிலையத்தினர் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து மரக்காணம் கிராமத்தை சேர்ந்த கேசவன் என்ற நபர் உயர்நீத்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாஸ்கரன், மக்களவை தேர்தல் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமத்தி மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பெரும்பாலான போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் உரிய பாதுகாப்பளித்தற்கு சிரமம் ஏற்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது எனவும், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி, ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சட்டத்திற்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரட்டார்.

The post தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chennai ,High Court ,Adal ,Temple Festival ,Dinakaran ,
× RELATED சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி...