×

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் நடிகர் தனுஷ்!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கினார். நடிகர் சங்க தலைவர் நாசரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் தனுஷ் வழங்கினார்.

மேலும் இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வங்கி வைப்புநிதிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி) நிதியுதவியை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி S. முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.

அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் நடிகர் தனுஷ்! appeared first on Dinakaran.

Tags : Dhanush ,South Indian Actors' Association ,Chennai ,Nadyar Sangh ,President ,Nasser ,Actor ,Dinakaran ,
× RELATED ரவி அரசு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ஜாவா