×

அகமதாபாத்தில் இன்று கேகேஆர்-குஜராத் மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன. குஜராத் 12 போட்டியில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளியுடன் 8வது இடத்தில் உள்ளது. இன்று மற்றும் கடைசி போட்டியில் ஐதராபாத்தை நல்ல ரன்ரேட்டில் வென்றாலும் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே வாய்ப்பு கிடைக்கும்.

மறுபுறம் கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்துவிட்ட நிலையில், பட்டியலில் முதல் இடத்தை தக்க வைக்கும் முனைப்பில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன் 3 முறை மோதி உள்ளன. இதில் குஜராத் 2, கேகேஆர் 1ல் வென்றுள்ளன.

The post அகமதாபாத்தில் இன்று கேகேஆர்-குஜராத் மோதல் appeared first on Dinakaran.

Tags : KKR ,Gujarat ,Ahmedabad ,Gujarat Titans ,Kolkata Knight Riders ,63rd IPL ,KKR-Gujarat ,Dinakaran ,
× RELATED தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை