×

இயக்குனர் ஆகிறார் விஷால்

சென்னை: துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார், நடிகர் விஷால்.நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் அவர் ஹீரோவாகிவிட்டார். என்றாலும், படம் இயக்குவேன் என்று கூறிவந்தார். இந்நிலையில், துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடிக்க முடிவு செய்தார். இந்த படத்தின் சில காட்சிகள் படமான நிலையில், பட்ஜெட் விவகாரம் தொடர்பாக விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இந்த படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இப்போது துப்பறிவாளன் 2 படத்தின் புதிய விளம்பரத்தை விஷால் வெளியிட்டுள்ளார். படத்தை அவரே இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் இயக்குனராக மாற உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரலில் லண்டனில் நடைபெற இருக்கிறதாம்….

The post இயக்குனர் ஆகிறார் விஷால் appeared first on Dinakaran.

Tags : Vishal ,Arjun ,
× RELATED தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்..!!