டெல்லி: நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
आज चौथे चरण का मतदान है!
पहले तीन चरणों में ही यह बात स्पष्ट हो चुकी है कि 4 जून को INDIA की सरकार बनने जा रही है।
याद रखिए, आपके एक वोट से सिर्फ आपके लोकतांत्रिक अधिकारों की रक्षा ही नहीं होगी, बल्कि पूरे परिवार की तकदीर बदल जाएगी।
1 वोट = युवाओं के लिए 1 लाख रू साल की पहली… pic.twitter.com/7py5MWvkDY
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2024
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி இந்திய அரசு அமையப் போகிறது என்பது முதல் மூன்று கட்டங்களில் தெளிவாகிவிட்டது. உங்கள் ஒரு வாக்கு உங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
1 வாக்கு = இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1 லட்சம் தரும் முதல் வேலை உத்தரவாதம்.
1 வாக்கு = ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்.
எனவே அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களியுங்கள், நாடு இப்போது அதன் பிரச்சினைகளின் அடிப்படையில் வாக்களிக்கும் – அது திசைதிருப்பப்படாது என்பதைக் காட்டுங்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
The post நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.