*வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில் பாபநாசம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படும் நிலையில் வேகத்தடையின் உயரத்தினை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.வலங்கைமான் பாபநாசம் சாலையில் வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் வேகத்தடை ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது.
வேகத்தடை அமைக்கப்பட்ட போது வழக்கத்தை விட உயரமாக அமைக்கப்பட்டது. வேகத்தடை அமைக்கப்பட்ட போதே வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுஇந்நிலையில் வேகத்தடையின் இரண்டு பக்கங்களிலும் சாலைகள் பள்ளமான நிலையில் வேகத்தடை சற்று உயரமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இவ்வழியே செல்லும் இருசக்கர வாகனங்கள் மிகுந்த சிரமத்தை அடைகின்றது.
வேகத்தடை இருப்பதை குறிப்பிடும் விதமாக வேகத்தடை மீது அவ்வப்போது அடிக்கப்படும் வண்ணங்கள் ஒரு சில நாட்களுக்கு உள்ளாகவே மறைந்து விடுகிறது மேலும் வேகத்தடையில் இரண்டு புறங்களிலும் வேகத்தடை இருப்பதை குறிப்பிடும் விதமாக சாலையில் வெள்ளை நிற கோடுகள் போடப்படவில்லை. இதன் காரணமாக வேகத்தடையின் மீது கார்கள் உள்ளிட்டவைகள் மோதி நிற்கிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிலைத்தடுமாறி அவ்வப்போது சிறு அளவிலான விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை உள்ள பகுதி ஆய்வு மேற்கொண்டு வேகத்தடையை நிரந்தரமாக அப்புறப்படுத்தவோ அல்லதுதற்போது உள்ள வேகத்தடையின் உயரத்தை குறைக்கும் விதமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது வேகத்தடைக்கு பதிலாக வெள்ளை வர்ணங்கள் ஆன கோடுகள் அமைத்திட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில் அடிக்கடி விபத்து வேகத்தடை உயரத்தை குறைக்க வேண்டும் appeared first on Dinakaran.