×

கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது

ஈரோடு : ஈரோடு இந்திரா நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் உத்தரவின் பேரில், ஈரோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் நேற்று அங்கு ரோந்து சென்றனர்.

அப்போது, கிருஷ்ணா தியேட்டர் பின்புறம் உள்ள மாதவ கிருஷ்ணா வீதியில் ஸ்வீட் விற்பனை செய்யும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளரான உத்திரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பனாவுடா பகுதியை சேர்ந்த பகதூர் (64) என்பவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Indira Nagar ,Erode District Prohibition DSP ,Shanmugam ,Erode Prohibition Division ,Inspector ,Saraswati ,Dinakaran ,
× RELATED பந்தலூர் இந்திரா நகரில் சேறும் சகதியுமான நடைபாதையால் பாதிப்பு