×
Saravana Stores

கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா: 100 வகை உணவுகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்

கோவை: கோவையில் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற பஞ்சாபி உணவுத் திருவிழாவில் ஏரளாமானோர் கலந்து கொண்டு நாக்கு சொட்ட வைக்கும் வித விதமான உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்தனர். கோவை பாலக்காடு சாலையில் உள்ள ஏஜேகே கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பஞ்சாபி உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தின் 100 வகையான உணவுகள் பொதுமக்களுக்கு சுவைக்க கிடைத்தன.

பிரதான உணவுக்கு முன்பான சிறு உணவுகளான உருளை கிழங்கு தந்தூரி, சேனைக்கிழங்கு கபாப், அங்காரா சிக்கன், பட்டியாலா கபாப் மீன் வறுவல் போன்றவை பலரது நாவின் சுவை மூட்டிகளை மலர செய்தன. பஞ்சாபி முறையில் தயாரிக்கபட்ட பருப்பு குழம்பு வகைகளான டால் மக்னீ, பஞ்சாபி கிரேவி, ராஜ்மா மசாலா, சோலே மசாலா போன்றவை சுவை பிரியர்களை குதூகலபடுத்தின.

இனிப்பு வகைகளில் பஞ்சாப் கோதுமை அல்வா, கேரட் மற்றும் பால் சேர்க்கப்பட்ட கஜ்றேளா, பஞ்சாப் லட்டுகள், ஹாட் ஜிலேபி, வெல்லம், வாழைப்பழம் மற்றும் பெருஞ்சீரக விதைகளை கொண்டு செய்யப்படும் குல்குலா போன்றவை பலருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்தன. சுமார் 2000 பேர் வருகை தந்து பஞ்சாபி உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர். முன்னதாக கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறை மாணவ, மாணவிகள் பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நவீன ஆடைகளை அணிந்து ஒய்யார நடைபோட்டு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

The post கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா: 100 வகை உணவுகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Punjabi Food Festival ,Coimbatore ,Punjabi ,AJK College of Arts and Sciences ,Palakkad Road ,
× RELATED உடைந்த பாலத்தால் மக்கள் தவிப்பு