திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கு அதிகமானோர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில், காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இது 194 ஏக்கரில் 2,682 மீட்டர் நீளம் வரையிலான நான்கு மதகுகள், இரண்டு கலங்கள்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரியை ஒட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவானது. இதனால் பல்வேறு இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டுவதாலும், குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவு நீரை ஏரிக்குள் கலந்து விடுவதாலும் நீர் மாசடைந்து குடிக்க தகுதியற்றதாக மாறியது.
மேலும் கடந்த ஆண்டு பெய்த மழையால் இந்த ஏரி நிரம்பியது. இந்நிலையில் அந்த ஏரியில் உள்ள மீன்கள் செத்து கரையோரம் மிதக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கரையோர பகுதிகளில் இந்த மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஏரிக்குள் கலக்காதவாரும், பல்வேறு இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காக்களூர் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.