- நெல் கிழக்கு மாவட்டம்
- காங்
- ஜெயக்குமார்
- அரிசி
- ஜனாதிபதி
- ஜெயகுமார் தனசிங்
- நெல்லா கிழக்கு மாவட்ட காங்கிரஸ்
- கேஏபிகே ஜெயகுமார் தானசிங்
- கரைசுத்துபுதூர்
- கிழக்கு மாவட்டம் காங்
- தின மலர்
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 4ம் தேதி காலை திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் என்ற 2 கடிதங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 10 தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 9 நாட்களை கடந்தும் இவ்வழக்கில் மர்மம் நீடிக்கிறது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெயக்குமார் உயிரிழந்து 4 மணி நேரத்துக்குப் பின் உடல் எரிக்கப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. 2-ம் தேதி காணாமல் போனதாக கூறப்படும் ஜெயக்குமார் சுமார் 5 மணி நேரம் வரை அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம். ஜெயக்குமாரின் கை, கால்கள் கட்டப்பட்டு, உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெயக்குமாரின் வயிற்றில் கடப்பா கல், இரும்பு தகடுகள் கட்டப்பட்டு உடல் எரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
The post நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் துன்புறுத்தப்பட்டு கொலையா?.. பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.