- நாகை பிளாக்
- எம். பி. செல்வராஜ்
- சென்னை
- நாகை பிளாக் எம். பி செல்வராஜ்
- நாகை எம்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு
- பி. யூமா செல்வராஜ்
- சென்னை மியாத் ஹாஸ்பிடல்
சென்னை: நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் (67) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் நாகை எம்.பி.யுமான செல்வராஜ் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே 2-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாகை எம்.பி., செல்வராசு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை ஒரு மணிக்கு செல்வராஜ் உயிரிழந்தார்
நாகை மக்களவைத் தொகுதியில் இருந்து 1989, 1996, 1998 2019 தேர்தலில் செல்வராசு வெற்றி பெற்றவர். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வயது முதிர்வு காரணமாக செல்வராசு போட்டியிடவில்லை. இதனிடையே அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு எம்.பி.செல்வராஜ் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். முன்னுதாரணமாக திகழ்ந்த, தலைமைத்துவம் கொண்ட மக்கள் ஊழியரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது. எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூ.கட்சியின் மாநில குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. எம்.பி. செல்வராஜ்-க்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்சியினர் செங்கொடியை அரைக் கம்பத்துக்கு இறக்க வேண்டும். தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக போராடியவர் மறைந்த எம்.பி.செல்வராஜ்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அமைக்க கோரி 110 கி.மீ. மனித சங்கிலி நடத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். ஓ.என்.ஜி.சி. தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்தவர் செல்வராஜ்.தொடர்சிகிச்சையிலும் கட்சிப் பொறுப்பு, மக்கள் பிரதிநிதி என தொகுதிக்குள் சலிப்பறியாது பணியாற்றியவர் செல்வராஜ் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நாகை தொகுதி எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்: தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.