×

மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது

சென்னை: திருத்தணி ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவரது வீட்டின் அருகே, நேற்று அரிய வகை ஆந்தை ஒன்று சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மகேஷ், உடனே ஆந்தையை லாவகமாக பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, திருத்தணி வனச்சரக அலுவலர் அருள்நாதன் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மனித முக தோற்றம் கொண்ட அந்த ஆந்தை ஆஸ்திரேலியா நாட்டில் காணப்படும் ஆந்தையாக இருக்கலாம் எனவும், இவ்வகை ஆந்தைகள் குடியிருப்புகள், கோபுரங்களில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தையை வனத்துறையினர் பாதுகாப்புடன் கூண்டில் வைத்து எடுத்துச் சென்றனர்.

The post மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mahesh ,Tiruthani ,
× RELATED ஒன்றிய அரசின் நிதிஆயோக் பட்டியலில்...