×

சந்தேஷ்காலி பற்றி பொய் பேசுகிறார் ஆளுநர் மீதான பாலியல் புகார் பற்றி மோடி பேசாதது ஏன்?: மம்தா கேள்வி

பராசத்: ‘சந்தேஷ்காலி விவகாரம் குறித்து தொடர்ந்து பொய்களை பரப்பி வரும் பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீதான மானபங்க புகார் குறித்து மவுனம் காப்பது ஏன்?’ என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாசின் சந்தேஷ்காலியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் நிலஅபகரிப்பு புகாரில் சிக்கிய ஷாஜகான் ஷேக் திரிணாமுலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்க பெண்களுக்கு தலா ரூ.2000 கொடுத்து 70க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்ததாக உள்ளூர் பாஜ தலைவர் ஒருவர் கூறும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

மேலும் அனைத்து போராட்டங்களின் பின்னணியில் பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாரக்பூர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு 24 பர்கனாசின் அம்தங்கா பகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ‘‘பிரதமர் மோடி இன்னும் சந்தேஷ்காலி பற்றி பொய்களைக் கூறி வருகிறார்.

இவை அனைத்தும் பாஜவின் சதி என்பது பகிரங்கமாகி விட்டதால் அவர் வெட்கப்பட வேண்டும். ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் ஒருவர் ஆளுநருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியும் ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை. இதுபாஜவின் உண்மையான பெண் விரோத குணத்தை காட்டுகிறது. மானபங்க குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரை ராஜினாமா செய்யும் படி பிரதமர் மோடி கேட்கவில்லை?’’ என்றார்.

The post சந்தேஷ்காலி பற்றி பொய் பேசுகிறார் ஆளுநர் மீதான பாலியல் புகார் பற்றி மோடி பேசாதது ஏன்?: மம்தா கேள்வி appeared first on Dinakaran.

Tags : Sandeshkali ,Modi ,Mamata ,Parasad ,West Bengal ,Governor ,Ananda Bose ,Mamata Banerjee ,Dinakaran ,
× RELATED குற்றவாளிகளை பாதுகாக்கும்...