×

நோட்டாவுக்கு 50% ஓட்டு விழுந்தால் மாற்றம் வரும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் சொந்த கட்சி வேட்பாளர் பாஜவில் இணைந்ததால் நோட்டாவுக்கு வாக்களிக்க காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் நோட்டா குறித்து முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓபி ராவத் கூறியதாவது:
தற்போதைய சூழலில், நோட்டா என்பது அடையாளத்திற்காக மட்டுமே உள்ளது. எந்த விதத்திலும் தேர்தல் முடிவில் நோட்டா தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஒரு தொகுதியில் 100 ஓட்டு இருந்தால் அதில் 99 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தாலும், எஞ்சிய 1 ஓட்டு எந்த வேட்பாளருக்கு கிடைத்ததோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

ஏதாவது ஒரு தொகுதியில் 50 சதவீதத்திற்கு மேல் நோட்டாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களையோ அல்லது தகுதியற்றவர்களையோ தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பதை அரசியல் சமூகத்திற்கு காட்ட வேண்டும். அதற்கு பிறகு தான் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் அழுத்தம் ஏற்படும். அதன் மூலம் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நோட்டாவுக்கு அதிகாரமளிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது பற்றி சிந்திப்பார்கள்.

இவ்வாறு கூறி உள்ளார். கடந்த 2013ல் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே நோட்டாவுக்கு கிடைத்துள்ளன.

The post நோட்டாவுக்கு 50% ஓட்டு விழுந்தால் மாற்றம் வரும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து appeared first on Dinakaran.

Tags : chief election commissioner ,Indore ,Congress ,Nota ,Madhya Pradesh ,Bajaj ,Obi Rawat ,Dinakaran ,
× RELATED சூதாடிய 12 பேர் கைது ₹23 ஆயிரம் பறிமுதல்