- பொய்மரா படகு விளையாட்டு அகாடமி
- மெரினா
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- போய்மரப் போட் ஸ்போர்ட்ஸ் ஏகேடெம
- சென்னை மெரினா கடற்கரை
- தமிழ்நாடு அரசு
- பைமரா போட் ஸ்போர்ட்ஸ் ஏகேடெம
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ₹7 கோடி செலவில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமியை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி ₹ 7 கோடி செலவில் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்துள்ளது.
பாய்மரப் படகு விளையாட்டு அகாடமி 2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை, வரவேற்பு அறை அமைக்கப்படுகிறது.
தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் பாய்மரப்படகு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில், பாய்மரப் படகு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு தளம் அமைய இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post மெரினாவில் ₹7 கோடி செலவில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி: தமிழ்நாடு அரசு திட்டம் appeared first on Dinakaran.