×

கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

பல்லியா: உத்தரபிரதேசத்தில் முன்னாள் மாணவர் தலைவர் ஒருவர் அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலரால், துப்பாக்கியால் சுட்டதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சுக்புரா அடுத்த பட்கவுலி கிராமத்தை சேர்ந்த கல்லூரி ஒன்றின் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் ஷிப்ராந்த் சிங் கவுதம் என்பவர், தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

பட்கவுலி கிராமம் அருகே வந்தபோது, பின்னால் பைக்கில் வந்த இரு இளைஞர்கள் ஷிப்ராந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஐந்து குண்டுகள் பாய்ந்த நிலையில், ஷிப்ராந்த் கீழே விழுந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது. அப்பகுதியை சேர்ந்த சிலர், ஷிப்ராந்த்தை மீட்டு வாரணாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.டி.கல்லூரி மாணவர் தலைவர் ஹேமந்த் யாதவ், எஸ்.சி.கல்லூரி சந்திப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஷிவ்பிரந்த் சிங் முக்கிய குற்றவாளி என்றும், இந்த சம்பவம் முந்தைய சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு appeared first on Dinakaran.

Tags : Ballia ,Uttar Pradesh ,Shibrant Singh ,Bhatkauli ,Sukpura, Uttar Pradesh ,
× RELATED உத்திரப் பிரதேச அரசு ஊழியர் சொத்து விவரம்: அவகாசம் நீட்டிப்பு