×

ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் ஆலோசனை

புதுடெல்லி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லி திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தலைநகர் டெல்லியில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் நேற்று வழிபாடு செய்தார். பின்னர் அவர் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன்பிறகு, தெற்கு டெல்லியில் தேர்தல் பிரசார வாகனப் பேரணிகளில் பங்கேற்றார். இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை கெஜ்ரிவால் சந்தித்தார்.

அப்போது டெல்லி தொகுதியில் செயல்படுத்துவரும் திட்டங்கள், மக்களவை ேதர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காலை 11 மணி – எம்எல்ஏக்கள் கூட்டம், மதியம் 1 மணி – கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு, மாலை 4 மணி – வாகனப் பேரணி, புதுடெல்லி மக்களவைத் தொகுதி – மோதி நகர் பகுதியில் மாலை 6 மணிக்கு வாகனப் பேரணி, மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி – உத்தம் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு நடக்கிறது. கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.

The post ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுடன் டெல்லி முதல்வர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Ahmadmi ,New Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Yes Atmi ,Kejriwal ,Tigar Prison ,Anuman Temple ,Canadplace ,Amaatmi ,
× RELATED ஜாமீனில் விடுவிக்கப்படுபவர்களின்...