- கடப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
- கோத்தகிரி
- திரு.
- முத்தமாரியம்மன் கோயில்
- கடப்பெட்டு பரதீநகர்
- பாகிகா நகர்
- கோத்தகிரி
- கடப்பெட்டு பாரதி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
- கோத்தகிரி
- சித்தப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பாரதிநகர் மற்றும் பாக்கிய நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திரு விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம்,பறவை காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோத்தகிரி அருகே கட்டப்பெட்டு பாரதி நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து விநாயகர் வழிபாடு அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காலை கட்டப்பெட்டு பாரதி நகர் தண்ணீர் பாலம் பகுதியில் பக்தர்கள் அலகு குத்தியும்,பால்குடம் காவடி மற்றும் பறவைக் காவடி ராட்சத கிரேன் மூலம் தொங்கியபடி ஊர்வலமாக கட்டப்பெட்டு பாரதி நகர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post கட்டப்பெட்டு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.