×

குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு: 40 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நேற்று நடைபெற்றது. இதல் பல்வேறு குறைகளை கொண்ட 40 வாகனங்கள் கண்டறியப்பட்டு, சரி செய்து வரும்படி திருப்பி அனுப்பப்பட்டது. குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கான வருடாந்திர தகுதி ஆய்வுகள் நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, ஆர்டிஓ சுகந்தி, டிஎஸ்பி இமயவரம்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று வாகனங்களின் தகுதியை ஆய்வு செய்தனார்.

இதில் தனியார் பள்ளிகளின் 247 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவசரகால வழி, ரிவர்ஸ் கேமரா போன்றவை இல்லையென கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தகுதி இல்லாத 40 வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். பின்னர், வாகன ஓட்டுனர்களுக்கு உடற்தகுதி குறித்த பரிசோதனையும், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும்
நடைபெற்றது.

 

The post குமாரபாளையத்தில் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு: 40 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kumarapaliai ,Kumarabalayam ,Kumarapaliam ,Kumarapaliam Regional Transport Office ,Kumarapalayam ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!