×

கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம்

கடலூர்: கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று அரசுப் பேருந்து ரெட்டிசாவடி அருகே மையத் தடுப்பில் மோதியது. பின்னல் வந்த தனியார் பேருந்து அரசு பேருந்து மீது மோதியதில் 25 பேர் காயம் காயம் அடைந்துள்ளனர்.

புதுச்சேரியிலிருந்து, காரைக்கால் நோக்கி சென்ற, அரசுப் பேருந்து, கடலூர், புதுச்சேரி சாலையில், ரெட்டிச்சாவடி என்ற இடத்தில், அருகே வரும்போது, மையத்தடுப்பு கட்டை மீது, திடீரென மோதியது. பின்னால், சென்னையில் இருந்து, வேளாங்கண்ணி செல்லும், தனியார் பேருந்தும், அரசு பேருந்தின், பின்பக்கம் மோதியது.

பேருந்து மோதியதை, தொடர்ந்து, அரசு பேருந்தில், பயணம் செய்த, இருபத்தைந்து பயணிகள், படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகள், கடலூர் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மையத்தடுப்பு அமைக்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை குறிபிபிடத்தக்கது மேலும் இந்த விபத்து காரணமாக, கடலூர், புதுச்சேரி கிழக்கு, கடற்கரை சாலையில், கிட்டத்தட்ட 1 மணி
நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடலூர் அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Puducherry ,Karaikal ,Retizawadi ,Braid ,Dinakaran ,
× RELATED ஆட்சியர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி உடைப்பு கடலூரில் பரபரப்பு