- தாரம்புரி மாவட்ட வனத்துறை
- தரும்புரி
- தாரம்பூரி மாவட்ட வனத்துறை
- ஒகனகல்
- கிருஷ்ணன்
- கிருஷ்ணா
- பென்னாகரம்
- தின மலர்
தருமபுரி: ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணன் என்பவர் பூர்வகுடிகள் அல்ல கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளை நிலங்களும், வீட்டு மனையும் உள்ளன என்று வனத்துறை விளக்கம்
ஒகேனக்கல் அருகே பென்னாகரம் வனப் பகுதிக்கு உள்பட்ட பேவனூா் காப்புக்காடு பகுதியில் காவிரி கரையோரத்தில் வேப்பமரத்துகொம்பு கிராமம் உள்ளது. அக் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப் பகுதியில் மூன்று தலைமுறையாக குடியிருந்து வரும் அவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனத் துறையினா் பலமுறை அறிவுறுத்தினா்.
இந்த நிலையில் வேப்பமரத்துகொம்பு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு வனத் துறை சாா்பில் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீட்டை விட்டு வெளியேறுமாறு அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டால் கிராம மக்கள் அனைவரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதாக வனத் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை காலை பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமாா் தலைமையிலான வனத் துறையினா், ஒகேனக்கல் காவல் துறையினா் நேரடியாக வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். கிராம மக்கள் அதைத் தடுக்க முயற்சித்த போது வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காட்டில் மணல் திட்டு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் அத்துமீறி நுழைந்து தகர கொட்டகை அமைத்துள்ளார். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியும் தமிழ்நாடு வனச்சட்டப்படியும் தகர கொட்டகை, சிறிய ஓட்டு வீடு ஆகிய ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டது.
வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணன் என்பவர் பூர்வகுடிகள் அல்ல கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளை நிலங்களும், வீட்டு மனையும் உள்ளன என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை வனத்துறை அகற்றியது தொடர்பாக சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானது. கொட்டகை இருந்த இடம், யானை வலசை பாதை என்பதால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. தருமபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் அளித்து சர்ச்சைக்குரிய வீடியோவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
The post வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை விளக்கம் appeared first on Dinakaran.