காரியாபட்டி, மே 12: சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தற்போது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக பல்வேறு பகுதிகளிலும் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான சோலார் பிளான்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி காரியாபட்டி அருகே டி.கடம்பங்குளம் கிராம பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தரப்பில் சோலார் பிளான்ட் அமைக்க முடிவானது. இதற்காக அப்பகுதியில் 40 ஏக்கர் நிலத்தை அவர்கள் வாங்கியுள்ளனர். பின்னர் அங்கு சோலார் பிளான்ட் அமைப்பதற்கான பணிகளை தொடங்கினர்.
இந்நிலையில் தங்கள் கிராமத்தின் அருகே சோலார் பிளான்ட் அமைப்பதால் தங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்று கூறிய கிராம மக்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் எதிரொலியாக நேற்று மாலை கிராம மக்கள் திரண்டு சோலார் பிளான்ட் பகுதியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த காரியாபட்டி வருவாய்துறை மற்றும் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
The post காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.