×

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்

கோவை, மே 12: கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம் நாளை (13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த சிறப்பு முகாம் நாளை (13ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமின் முதல் நாள் (13ம் தேதி) 120 பேருக்கும், 14ம் தேதி 119 பேருக்கும், 15ம் தேதி 115 பேருக்கும் என மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும். இதில், 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் சீஸ்னல் இன்ப்ளூன்சா வேக்சின் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Camp for Haj Pilgrims ,Coimbatore District ,Coimbatore ,Collector ,Krantikumar Badi ,
× RELATED கோவை மாவட்டம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு!!