×

மதுபோதையில் பவானி ஆற்றில் இறந்தவர் போல் கிடந்த உபி வாலிபர்

மேட்டுப்பாளையம், மே 12: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்ஐ குருசந்திர வடிவேல் தலைமையில் போலீசார் அங்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்றனர். அப்போது, அங்கு சென்ற போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பவானி ஆற்றில் விழுந்து கிடந்த நபரை பரிசோதனை செய்த போது அவர் அதிக மதுபோதையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு விழுந்து கிடந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த வாலிபரை விசாரித்த போது உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும், மதுபோதையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு ஆற்றில் விழுந்து கிடந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வாலிபரை தட்டி எழுப்பிய போலீசார், அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post மதுபோதையில் பவானி ஆற்றில் இறந்தவர் போல் கிடந்த உபி வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Bhawani river ,Mettupalayam ,Bhavani river ,SI Guruchandra Vadvel ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி...