- திருச்சி இபி ரோட் நகராட்சி பள்ளி
- திருச்சி
- திருச்சி இபி ரோட் கார்ப்பரேஷன் பள்ளி
- திருச்சி இபி...
- தின மலர்
திருச்சி, மே.12: திருச்சி இபி ரோடு மாநகராட்சி பள்ளி நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 83% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். திருச்சி இபி ரோடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி நடந்து முடிந்த SSLC மார்ச்-2024 பொதுத்தேர்வில் 83% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியின் மாணவி தீபிகா 500/392 மதிப்பெண்களும், சஞ்சீதா 500/390 மதிப்பெண்களும், மாணவன் ஆகாஷ் 500/387 மதிப்பெண்களும், மாணவி கோபிகா 500/386 மதிப்பெண்களும், சரண்யா 500/358 மதிப்பெண்களும் பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களாக தேர்வு பெற்றனர். பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆல்பர்ட் ராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
The post பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி இபி ரோடு மாநகராட்சி பள்ளி 83% தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.