×

மழை பெய்ய வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை

புதுக்கோட்டை, மே 12: புதுக்கோட்டை ஆஞ்சநேயர் ஆலயத்தில் மழை பெய்ய வேண்டியும்,நல்ல விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு வழிபாடுகூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள  ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் திருச்சபை சார்பில் வர்ண பகவானிடம் வெயிலின் தாக்கம்குறைந்து , நல்ல மழை பெய்ய வேண்டியும்,நல்ல விவசாயம் செழிக்க வேண்டியும் , மக்கள் நலமாக இருக்கவும்,சிறப்பு வழிபாடுகூட்டு பிரார்த்தனை நடத்தினர். ஆஞ்சநேயர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் நந்தி பகவானுக்கு வர்ண கலச அபிஷேகங்கள் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பெண்கள், கலந்து கொண்டு நந்தி பகவானுக்கு வர்ண கலச அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post மழை பெய்ய வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Anjaneya Temple ,Pudukottai ,Anjaneyar Temple ,Hanuman Church ,Anjaneyar ,Temple ,Pudukottai South 4th Street ,Lord Varna ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்