×

மதுரையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள முந்திரி பருப்புடன் குஜராத் சென்ற லாரி பறிமுதல்

மதுரை, மே 12: தூத்துக்குடி துறைமுகத்திற்கு முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்களுடன் கண்டெய்னர் கப்பலில் வந்தது. இதிருந்து சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள முந்திரி பருப்புகளை லாரியில் ஏற்றி கொண்டு குஜராத் மாநிலம், சூரத்திற்கு ஒரு லாரி சென்றது. நேற்று மதுரை ரிங்ரோடு வலையங்குளம் பகுதியில் வந்த போது வணிவரி துறை அமலாக்கப்பிரிவு லாரியை நிறுத்தி ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என ேசாதனை செய்தனர். சரியாக ஆவணங்கள் இல்லாததால் அந்த லாரியை பறிமுதல் செய்து மதுரையில் டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள வணிகவரி துறை தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

The post மதுரையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள முந்திரி பருப்புடன் குஜராத் சென்ற லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Madurai ,Thoothukudi ,Surat, Gujarat ,Dinakaran ,
× RELATED தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை