- தென்னங்கீருட்பந்தல் அரசு போக்குவரத்து கழகம்
- சங்கம்
- பெரம்பலூர்
- தமிழ்நாடு அரசு ஓய்வூதியக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர் நலச் சங்கம்
- கந்தசுவாமி
- முத்துசுவாமி
- குணசேகரன்
- ஜனாதிபதி
- மருதமுத்து
- தென்னங்கீருப்பந்தல் அரசு போக்குவரத்து கழகம்
- யூனியன்
- விலை கடை
- தின மலர்
பெரம்பலூர்,மே12: பெரம்பலூரில் தமிழ்நாடு அரசுப்போக்கு வரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க கிளை மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கந்தசாமி தலைமை வகித் தார். முத்துசாமி, குணசேக ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் மருத முத்து, பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.கூட்டத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல், பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினரின் மக ளுக்கு பாராட்டி கேடயம் வழங்குதல், பேருந்து பணி யில் பயணிகள் தவறவிட்ட 10 பவுன் மற்றும் வெள்ளிப் பொருட்களை பயணியைத் தேடி கண்டுபிடித்து திரும்பி ஒப்படைத்த ஓட்டுநர் நடத்து னர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நீண்ட காலமாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல் உள்ளதால் அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். பணபங்களிப்பு இல்லாத அனைவருக்கும் பயனளிக்கும் மருத்துவத் திட்டத்தை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். பென்சன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று அரசு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து ஓய்வுதியர்களையும் ஒருங்கிணைத்து, ஜூன் மாதத்தில் மிகப்பெரிய இயக்கம் நடத்திட மாநில பேரவையை கேட்டுக் கொள்வது என தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயலாளர் சூரிய குமார் நன்றி கூறினார்.
The post நியாயவிலை கடையில் தென்னங்கீற்றுப்பந்தல் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.