×

வீட்டில் பூத்த அதிசய பிரம்ம கமல பூக்கள்

கொடைக்கானல், மே 12: பனி பிரதேசங்களில் மட்டுமே அதிசயமாக பூக்கும் பிரம்ம கமல பூக்கள் கொடைக்கானலில் உள்ள தனியார் வீட்டில் பூத்துள்ளது. இமயமலை போன்ற பனிப் பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடிய அதிசய பிரம்ம கமல பூக்கள் கொடைக்கானலில் பூந்துள்ளது. வெண்மை மற்றும்இளம் சிவப்பு நிறங்களில் பூக்கக்கூடிய இந்த அதிசய பிரம்ம கமல பூக்கள் பூக்கும். இரவு நேரங்களில் மட்டுமே இந்த அதிசய பிரம்ம கமல பூக்கள் பூக்கும். கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் உள்ள தனியார் வீட்டில் இந்த அதிசய பிரம்ம கமல பூக்கள் வெண்மை நிறத்தில் பூத்துள்ளன. இந்தப் பூக்களை பொதுமக்கள் அதிசயத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

The post வீட்டில் பூத்த அதிசய பிரம்ம கமல பூக்கள் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Himalayas ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...