×

பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த செப்டாங்குளம் அடுத்த எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(38), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் நெற்பயிருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக்கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கப்பட்டது. அதில் பாறை வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட கல், சுமார் 500 மீட்டர் தூரம் பறந்து வந்து ஆறுமுகம் தலையில் விழுந்துள்ளதில் துடிதுடித்து உயிரிழந்தார்.

The post பாறை வெடித்து தலையில் விழுந்து விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Arumugam ,Thiruvannamalai district ,Septangulam ,Edapalayam ,
× RELATED போக்குவரத்து தொழிலாளர் – போலீசார்...