×

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர் மகளைவிட 5 மதிப்பெண் அதிகம் பெற்ற தாய்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வடக்கு சேர்பட்டியை சேர்ந்தவர் தும்மாயி (37). 9ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், இதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் யோகேஸ்வரி. இவர் தாய் வேலை பார்க்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தும்மாயி இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுத விருப்பப்பட்டார். இது தெரிந்த வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர்.

இதையடுத்து தும்மாயி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். காலை பள்ளிக்கு சென்று உணவை தயார் செய்து மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் பயிற்சி பள்ளிக்கு சென்று படித்துவிட்டு மாலை வீடு திரும்புவார். கடந்த மார்ச் மாதம் யோகேஸ்வரி 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். மகளுடன் தனித்தேர்வராக தும்மாயியும் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தும்மாயி 500க்கு 358 மதிப்பெண்களும், யோகேஸ்வரி 353 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர். தும்மாயி மகளைவிட 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார்.

* 42 வயதில் தேர்வெழுதிய தாயும், மகனும் பாஸ்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நித்யா(42), மகன் சந்தோஷ் (17). சந்தோஷ் அதே கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தார். இதனால் சந்தோஷ் பள்ளி செல்லாமல் இருந்தார். மகனை தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதற்காகவும், அரசு வேலை பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நித்தியா வந்தவாசியில் உள்ள தனியார் கல்வி மையத்தில் தாய், மகன் இருவரும் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் நித்யா 274 மதிப்பெண்களும், அவரது மகன் சந்தோஷ் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

The post ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர் மகளைவிட 5 மதிப்பெண் அதிகம் பெற்ற தாய் appeared first on Dinakaran.

Tags : Manaparai ,Thummai ,North Serpatti ,Trichy district ,Yogeswari ,
× RELATED எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்