×

பத்மபூஷண் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதாவுக்கு வரவேற்பு போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்: ஏர்போர்ட்டில் பரபரப்பு

சென்னை: ஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பெற்றுக்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்.அப்போது பிரேமலதாவை தொடர்ந்து அவருடைய கட்சி பிரமுகர்கள் விமான நிலையத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் வரை பேரணியாக செல்ல முயன்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தேமுதிகவினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வாகனத்திலிருந்து இறங்கி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் தேமுதிக தொண்டர் ஒருவர், வாகனம் ஒன்றின் மீது ஏறி தேமுதிக கொடி கட்டி இருந்த கம்பத்தால் வாகனத்தின் மேல் பகுதியை அடித்து நொறுக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ பிரேமலதாவை வரவேற்க 50 பேர் வருவார்கள் என்று தெரிவித்தனர். ஆனால் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். மேலும் பேரணியாக செல்வதற்கு முன் அனுமதி எதுவும் பெறவில்லை. இப்போது நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுதான் பேரணி செல்ல வேண்டும் என்றனர். பிறகு போக்குவரத்தை கட்டுப்படுத்தி அவ்வப்போது வாகனங்களை போலீசார் விடுவித்தனர்.
பிரேமலதா அளித்த பேட்டியில், ‘‘விஜயகாந்த் உயிருடன் இருந்து பத்ம பூஷண் விருதை வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய வரமாக இருந்து இருக்கும். காலம் தாழ்ந்து கிடைத்தாலும், விருதை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்’’ என்று கூறினார். பின்னர் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு புறப்பட்டுச் பிரேமலதா சென்றார்.

The post பத்மபூஷண் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதாவுக்கு வரவேற்பு போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்: ஏர்போர்ட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Premalatha ,Chennai ,DMudikavinar ,DMD General Secretary ,Premalatha Vijayakanth ,Jayakanth ,President ,Drupati Murmu ,Delhi ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...