×

இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா


ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 3வது சுற்றில் கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா (29 வயது, 41வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ஸ்வியாடெக் (போலந்து, 22 வயது) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 1 மணி, 46 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் ஸ்பெயினின் படோசா 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டயானா ஷ்னெய்டரை போராடி வென்றார். நட்சத்திர வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post இத்தாலி ஓபன் 4வது சுற்றில் இகா appeared first on Dinakaran.

Tags : Iga ,Italian Open ,ROME ,ITALIAN OPEN TENNIS SERIES ,IGA SWIATEC ,Kazakhstan ,Yulia Budintseva ,Dinakaran ,
× RELATED இத்தாலியில் தீப்பிழப்பைக் கக்கும்...