ராஞ்சி: ஜார்க்கண்டில் நடந்த நிலமோசடியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியும், ராஞ்சி முன்னாள் துணைஆணையருமான சாவி ரஞ்சன் உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போலி பதிவுகள், போலியாக நில ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டில் சஞ்சீவ் குமார், எம்.டி.இர்ஷத் மற்றும் தபஸ் கோஷ் ஆகியோர் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
The post ஜார்க்கண்ட் நிலஅபகரிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.