×

மாமல்லபுரம் பிடாரி அம்மன் ரதம் பகுதியில் நடைபாதையில் கருங்கற்கள் அமைக்கும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பிடாரி அம்மன் ரதம் பகுதியில் நடைபாதையில் கருங்கற்கள் அமைக்கும் பணியை தொல்லியல் துறை தீவிரப்படுத்தி உள்ளது. மாமல்லபுரத்தில் 7ம் நூற்றாண்டு பல்லவ மன்னர்கள் வாழ்ந்த காலத்தில், மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட வெண்ணெய் உருண்டை பாறை, அச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், ராயகோபுரம், பழைய கலங்கரை விளக்கம், ஐந்துரதம், கடற்கரை கோயில், புலிக்குகை உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் உலக புகழ் வாய்ந்த சின்னங்களாக திகழ்கின்றன. இந்த புராதன சின்னங்களை காண உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர்கள், மாமல்லபுரம் எல்லை பகுதியில் உள்ள  கருக்காத்தம்மன் கோயில் அருகே உள்ள பிடாரி அம்மன் ரதத்தையும் ஆர்வமுடன் சுற்றி பார்க்கின்றனர்.கடந்த சில மாதங்களாக பிடாரி அம்மன் ரதத்தை பார்க்க ஏராளமான பயணிகள் வருகின்றனர். அப்போது, பிடாரி அம்மன் ரதம் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடைபாதை இல்லாமல் இருந்தது. இதனால், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுற்றி பார்க்க சிரமம் ஏற்பட்டது. அங்கு முறையான பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைதொடர்ந்து, தொல்லியல் துறை நிர்வாகம் சார்பில், பிடாரி அம்மன் ரதம் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் கருங்கற்களால் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது….

The post மாமல்லபுரம் பிடாரி அம்மன் ரதம் பகுதியில் நடைபாதையில் கருங்கற்கள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Bitari Amman Ratham ,Mamallapuram ,Pitari Amman Ratham ,
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்