×

வருண்காந்திக்கு சீட் வழங்காதது ஏன்?.. மேனகா காந்தி விளக்கம்


சுல்தான்பூர்: மகன் வருண்காந்திக்கு தேர்தலில் போட்டியிட பாஜ வாய்ப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து அவரது தாயாரும் பாஜ எம்பியுமான மேனகா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூர் தொகுதியில் 8வது முறையாக மேனகா காந்தி பாஜ வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஆனால் அவரது மகன் வருண்காந்திக்கு பா.ஜ பிலிப்பித் தொகுதி்யை ஒதுக்கவில்லை.

இது குறித்து மேனகா காந்தி கூறியதாவது, ‘‘வருண்காந்திக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறமுடியாது. ஆனால் சீட் வழங்காவிட்டாலும் வருண்காந்தி சிறப்பாக செயல்படுவார். கட்சி ஒரு முடிவை எடுத்துள்ளது. அரசை விமர்சிக்கும் வகையில் வருண் எழுதியது தான் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை தவிர வேறு ஒன்றையும் நினைக்க முடியவில்லை ” என்றார்.

The post வருண்காந்திக்கு சீட் வழங்காதது ஏன்?.. மேனகா காந்தி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Varun Gandhi ,Maneka Gandhi ,Sultanpur ,BJP ,Uttar Pradesh ,
× RELATED ராமர் கோயில் கட்டியது தேர்தல் பிரச்னை அல்ல: மேனகா காந்தி பேட்டி