×

சிவகங்கை கப்பல் நாகை வந்தது; இலங்கைக்கு 13ம் தேதி முதல் போக்குவரத்து.! நாளை சோதனை ஓட்டம்

நாகை: சிவகங்கை கப்பல் இன்று நாகை வந்தது. நாளை இலங்கைக்கு சோதனை ஓட்டம் நடக்கிறது. நாளை மறுதினம் முதல் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி துவங்கப்பட்டது. செரியபாணி என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பலில் கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்பட்டது.

இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து வரும் 13ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்தமானில் சிவகங்கை என்ற கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று மதியம் வந்தது. பின்னர் அங்கிருந்து நேற்றிரவு புறப்பட்டு நாகை துறைமுகத்திற்கு இன்று மதியம் வந்தடைந்தது. நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கப்பல் சோதனை ஓட்டம் நாளை நடக்கிறது.கப்பல் சேவை நாளை மறுநாள் (13ம் தேதி) முதல் துவங்குகிறது.

காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் மதியம் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைக்கு சென்றடையும். அதேபோல் இலங்கையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு நாகை துறைமுகத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடையும். இதற்கு கட்டணமாக அமெரிக்க டாலர் 75(இந்திய கட்டணம் ரூ.4,800) மற்றும் 18 சதவீதம் ஜிஎஸ்டியுன் சேர்த்து ரூ.5662. கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் www.sailindsri.com அல்லது md@indsri.ferry.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை கப்பல் நாகை வந்தது; இலங்கைக்கு 13ம் தேதி முதல் போக்குவரத்து.! நாளை சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Naqai ,Sri Lanka ,Nagai ,Congessian ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...