×

10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு

டெல்லி: 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 4-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் ஒடிசா, ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலும், ஆந்திரா மற்றும் ஒடிசாவில் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கிடையே 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு, 10 மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. 4-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் ஒடிசா, ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளிலும் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

The post 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : phase ,states ,Delhi ,Odisha ,Dinakaran ,
× RELATED 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம்...