புதுடெல்லி: 18 மாதங்களுக்கு பின் இந்தியாவுக்கான சீன தூதர் சூ பியூஹாங் டெல்லியில் பொறுப்பேற்றார்.இந்தியா – சீனா இடையிலான உறவு, கடந்த சில ஆண்டுகளாக மோசமடைந்து வருகிறது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு மேலும் மோசமடைந்து வந்தது. அதனால் சீனா தனது இந்திய தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது. இந்நிலையில் கிட்டத்தட்ட 18 மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சீனா மீண்டும் தனது தூதர் சூ பியூஹாங் என்பவரை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. அவர் தனது மனைவியுடன் நேற்று டெல்லி வந்தடைந்தார்.
அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான புரிதல் மற்றும் நட்பை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் விரும்புகிறேன். எல்லைப் பிரச்னைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றார். இந்திய தூதராக நியமிக்கப்பட்ட சூ பியூஹாங், ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியாவுக்கான சீன தூதராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 18 மாதங்களுக்கு பின் சீன தூதர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.