- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலையியல்
- சென்னை
- நீலகிரி
- கோவாய்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- விருதுநகர்
- தென்காசி
- நெல்லா
- குமாரி
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(மே12) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோடை வெப்பம் அதிகரித்ததால் வெப்ப அலை வீச ஆரம்பித்தது. இதன் காரணமாக சென்னை, கரூர், திருப்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்தது.
இதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்தனர். மேலும் கடந்த 4ம் தேதி முதல் கத்தரி வெயில் ஆரம்பித்தது. இதனாலும் வெப்பம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. மேலும் வெப்பநிலை பொறுத்தவரையிலும் தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் 2 டிகிரி -3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
The post தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.